Agara thoorigai 2006-01-19T02:29:40Z Copyright 2006 WordPress Administrator <![CDATA[வணக்கம்.]]> http://arunhere.com/pathivu/?p=3 2005-03-31T19:37:23Z 2005-03-31T19:37:23Z பொது வணக்கம்.
எனது புது வீட்டிற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது தான் குடியேறி உள்ளேன். இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, ஆங்காங்கே அவ்வப்போது ஏதேனும் புதிது புதிதாய் விஷயங்கள் தென்பட்டுக் கொண்டே இருக்கத் தான் செய்யும். இந்த வீட்டிற்கு நான் வருவதற்கு பெரிதும் உதவி செய்த மதி கந்தசாமிக்கு என் நன்றிகள் பல!

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[போதை,கடல் மற்றும் உணவு]]> http://arunhere.com/pathivu/?p=4 2005-04-01T18:26:53Z 2005-04-01T18:26:53Z கலை Harold and Kumar go to white castle:-

ஹரால்ட் என்ற ஆசிய அமெரிக்கனும், குமார் என்ற இந்திய அமெரிக்கனும் வொயிட் காஸ்டில் என்ற அமெரிக்க உணவு விடுதியில், பர்கர் சாப்பிட ஆசைப்பட்டுப் பயணத்தைத் துவக்குகிறார்கள். இத்துணூண்டு கதையை வைத்து, திரைக்கதை மூலமாக ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்கள்.

படம் வயது வந்தோர்களுக்கான படம் என்பதால், கொஞ்சம் கவனம் அவசியம். படத்தில் நிற பேதங்களிலிருந்து பல விஷயங்களை விளையாட்டாகவே கிண்டல் அடித்து கலக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குனர் டேனி லேய்னர், ஏற்கனவே Dude, where is my car என்ற படத்தின் மூலம் ரவுசு கட்டியவர் தான். படம் கஞ்சா அடிப்பதினால் ஏற்படும் போதையிலிருந்து இன்னும் பல ஏடாகூடமான இடங்களுக்கெல்லாம் சென்றாலும், சிறப்பான நகைச்சுவையோடும் நல்ல நடிப்போடும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டி.வி.டியில் கூட நகைச்சுவை அம்சம் இழையோடி இருப்பது ஒரு கலக்கல் ‘டச்’. டி.வி.டி போட்டவுடனே, நம்மைப் பார்த்து ஹரால்டும், குமாரும் ஆச்சர்யமாய் பார்த்தபடி பேசுகிறார்கள். ‘எப்படா இவன் Playவை அழுத்துவான்’ என்றெல்லாம் கலாய்க்கிறார்கள். ஹாலிவுட் படமொன்றில் குமார் எனும் நம்மூர்ப்பெயர் இடம் பெற்றிருப்பது ஒரு குஷியான சமாச்சாரம் தானே ?!

Open Water

கணவன், மனைவி காமெரா மற்றும் இயக்கத்தை கவனிக்க, இரண்டே இரண்டு நடிகர்கள் நடிக்க நட்ட நடுக்கடலில் எடுக்கப்பட்ட ஒரு ‘இன்டிபெண்டென்ட்’ படம் தான் Open water. நட்டநடுக்கடலில் விடுமுறையைக் கழிப்பதற்காக செல்லும் இரண்டு காதலர்கள், கடலுக்கடியில் ஸ்கூபா டைவ் செய்யும் போது…அவர்களை அழைத்து வந்தவர்கள் தவறுதலாக விட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள். ஒரு நாள் முழுதும் கடலில் அவர்கள் சந்திக்கும் அபாயங்கள் (சுறாக்கள்), அவர்களுக்கு நேரும் அசம்பாவிதங்கள் தான் படமே. திரைப்படம் என்றால் நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்ய வேண்டும் என்ற இலக்கணத்தை ‘டிஜிட்டல்’ உலகம் மாற்றியமைத்து வருகிறது. இந்தப் படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிரபலமடைந்து…தியெட்டர்களிலும் லயன்ஸ் கேட் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டு, பல மில்லியன் டாலர்களை அள்ளிச் சென்றுள்ளது. உண்மையான சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் (ஆங்காங்கே கொஞ்சம் இழுவை என்றாலும்) பிரமிக்க வைக்கிறது. Chris Kentis, இயக்கியிருக்கும் இந்தப் படம் தனியார் தயாரிக்கும் திரைப்படங்களில் மற்றுமொரு மைல்கல் தான்! வாரயிறுதிகளில் மட்டுமே படத்தை இயக்கி, மற்ற நாட்களில் மற்றவர்களைப் போல் வேலை செய்து Open water எடுத்திருக்கிறார். கிறிஸ்ஸின் இந்த வெற்றிக்கு, அவரது மனைவி லாராவுக்கும் சம பங்கு உண்டு (படத்தில் இவரும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது!). அந்த முயற்சிக்காகவும், உழைப்பிற்காகவும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

Supersize me

மெக் டொனால்ட்ஸில் முப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், என்னென்ன விதமான உடல்நலக்கேடுகள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக தன்னையே சோதனைக்கு உட்படுத்தி, மார்கன் ஸ்பர்லாக் என்பவர் எடுத்திருக்கும் விவரணப்படம் தான் Supersize me. அதுவும் Supersize என்ற பெயரில், அளவுக்கு அதிகமாக இறைச்சியும், ப்ரெஞ்ச் ·பிரைசும் தரும் அமெரிக்க கலாச்சாரத்தை சாடி எடுத்திருக்கிறார். படம் பார்க்கும் போது, இந்த விரைவு வேக உணவுக் கலாச்சாரம் ஏற்படுத்தும் படு பயங்கரமான பாதிப்புகள் நம்மை பயத்துக்குள்ளாக்குகிறது. “முப்பது நாள் யாராவது இப்படி சாப்பிடுவாங்களா? ” என்று கேட்பவர்களுக்கு, முப்பது நாள் சாப்பிடுக்கிறார்களோ இல்லையோ வாரத்துக்கு மூன்று நாள் விரைவு வேக உணவகங்களில் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். உடற்பயிற்சி குறைவு, அளவுக்கதிமான சீஸ் மற்றும் மாமிசம் போன்ற விஷயங்களினால், உடல் பெருத்து ஏற்படும் உபாதைகளை கச்சிதமாய் சொல்லியிருக்கிறார் மார்கன். பார்க்க வேண்டிய விவரணப்படங்களில் இதுவும் ஒன்று!

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[மும்பை எக்ஸ்பிரஸ்]]> http://arunhere.com/pathivu/?p=5 2005-04-02T23:56:23Z 2005-04-02T23:56:23Z கலை கமல்ஹாசன், மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் கண்டிப்பாய் சிரிக்க வைக்கிறேன் என்ற உறுதிமொழியோடு வருகிறார். நான் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்…ஏனென்றால்,

தமிழ்நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் ஒரு படம் எடுக்கப்பட்டு வருவது நல்ல முயற்சி (வானம் வசப்படும் - ஹெச்.டி). சாதாரணமாய் நாம் காம்கார்டரில் போட்டு எடுக்கும் மினிடிவியில் படம் செய்யப்பட்டு வருவதால்…செலவுகள் படு கம்மியாய் இருக்கும். விருமாண்டி டிவிடியாய் வரும் போது படம் எப்படி செய்தார் என்றும், கமல்ஹாசனின் காமெண்டரியோடும் வெளியிடப் போவதாகவும் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பி…கடைசியில் சாதாரணமாய் தான் வெளியிடப்பட்டது. மும்பை எக்ஸ்பிரஸ்ஸிலாவது டைரக்டர் காமெண்டரியோடு டிவிடி வந்தால், பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வசதியாய் இருக்கும். இந்தப் படம் ஹிட்டானால், இன்னும் பல படங்கள் டிஜிட்டல் முறையில் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது. நியூஜெர்சியில் படம் தமிழ்புத்தாண்டு அன்று வெளியாகிறது… எக்ஸ்பிரஸில் ஏறிவிட வேண்டியது தான். பயணம் எப்படி என்ற விஷயமும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்!

பி.கு:- சந்திரமுகி மற்றும் சச்சின் ரிலீஸாவது குறித்து இதுவரை தகவல்கள் எதுவுமில்லை!

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[ஜோசியம்]]> http://arunhere.com/pathivu/?p=6 2005-04-04T17:14:11Z 2005-04-04T17:14:11Z கவிதை கிளியின்
துளிநிமிட விடுதலை,
அளிக்கப்படும் அரிசி
ஆகியன எண்ணி…
அடுக்கப்பட்டிருக்கும்
அட்டைகளிலொன்றில்
எனது மிச்ச வாழ்விற்கான
சூத்திரமிருப்பதாய் நம்புகிறேன்.

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[சென்னை திரையிடல் - புகைப்படங்கள்]]> http://arunhere.com/pathivu/?p=7 2005-04-06T11:58:22Z 2005-04-06T11:58:22Z கலை கடந்த மார்ச் 8ஆம் தேதி, சென்னையில் நடந்த குறும்படங்கள் திரையிடல் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு. பத்திரிக்கைகளில் வந்த பேட்டிகளையும் காலரியில் இணைத்துள்ளேன். நான் 1996-97 ஆம் வருடம் தினபூமி டிவிபூமியில் கொடுத்த பேட்டி சமீபத்தில் கைக்குக் கிடைத்தது. இன்னும் நிறைய புகைப்படங்களும், இன்ன பிற விஷயங்களும் இந்த கேலரியில் இணைக்க வேண்டும்….செய்தவுடன் சொல்கிறேன்.

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[தில்லானாமோகனாம்பாளும்,காவிய புதனும்!]]> http://arunhere.com/pathivu/?p=10 2005-04-07T17:53:48Z 2005-04-07T17:53:48Z கட்டுரை தில்லானா மோகனாம்பாள் நாவலாய் வந்த போதே, நிறைய வாசகர்கள் விகடனை மொய்த்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். இந்தப் படத்தின் கதை வசன ஒலிநாடா,எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டரில் ஓடி ஓடித் தேய்ந்திருக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மோகனாவுக்கும், ஷண்முகசுந்தரத்திற்கும் போட்டியும், சவாலும் ஏற்பட்டு விடுகிறது (திரைக்கதை உத்தி). நடிகர்களின் அபரிதமான நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாய்ப் பொருந்தும் நடிகர்கள் என்று படத்தின் +கள் பல! ஜில் ஜில் ரமாமணி, சவடால் வைத்தி, வடிவு என்று நாயக நாயகி அல்லாத பாத்திரங்களின் பெயர்கள் நம் மனக்கண்ணில் நிழலாடுவதே படத்தின் பெரும் சிறப்பு தான்.

புத்தம் புதிய காப்பி, பாலியஸ்டர் பிரிண்ட் என்று பல அவதாரங்களில், இந்தப் படங்கள் வந்த போதும்..பார்க்கத் தவறியதே இல்லை. தில்லானா மோகனாம்பாளுக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற போது, கிழிந்த சட்டைகள், உடைந்த வாட்சுகள் போன்றவை இன்னமும் எங்கள் உறவினர்களின் திருமணங்களின் போது, யாரேனும் ஒரு பெரியவரால் சிலாகித்து அலசப்பட்டுக் கொண்டிருக்கும்.

Nadigar thilagam Sivaji & Arun

இதைப் பற்றி சொல்லும் போது, நடிகர் திலகத்தை நான் பார்த்த தருணங்களும் ஞாபகம் வருகிறது. காங்கிரசுக்காக சீர்காழியில் பிரச்சாரம் செய்ய வந்ததிலிருந்து, அவரது வீட்டிற்கே சென்று பார்த்த வரை பல முறை அவரைக் கண்டிருக்கிறேன். மேலே காணும் புகைப்படம், சிவாஜியோடு அவரது வீட்டில் எடுத்தது. ஜிலு ஜிலு நீல ஜெர்சி சட்டை போட்டு, (வெள்ளை பிரில் வேறு..ஹி..ஹி)…டிப் டாப்பாய் பட்டிக்காட்டுத் தனமாய் நிற்பது ‘சின்ன வயது’ நான் தான்!
எனது தந்தை ஒரு அதிபயங்கர சிவாஜி ரசிகர். இப்போதும் கூட சிவாஜி ஓவர் ஆக்டிங் என்றெல்லாம் யாரேனும் சொன்னால், அந்த விவாதத்திலிருந்து விலகி விடுவார்.

அவர் எத்தகைய ரசிகரென்றால், சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி ஆரம்பித்து, இரட்டைப் புறாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஜானகியோடு கூட்டணி வைத்த போது சிவாஜி சொன்னதற்காக, சீர்காழியில் இரட்டைப்புறாவுக்கு விழுந்த சில ஓட்டுகளில் எனது தந்தையின் ஓட்டும் ஒன்று. (’என் தமிழ் என் மக்கள்’ முதல் நாள் பார்த்த சிலரில் நாங்களும் ஒருவராய் இருப்போம் என்று நினைக்கிறேன்).

அது எப்படி இன்னும் ‘உத்தம புத்திரன்’ திரைப்படம் போட்டால், அதே ஆர்வத்தோடும் குதூகலத்தோடும் எனது தந்தை மற்றும் அவரது சகோதரர்களால் ரசிக்க முடிகிறது என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். “பாலும் பழமும்லே கணேசன் நடந்து வருவானே…அந்த அழகே தனி தான்” என்று அவர்களின் பேச்செல்லாம் கணேச அகவல் தான். நான் வலைப்பூவில் ஆசிரியராய் இருந்த போது, சிவாஜியைப் பற்றி எழுதிய
கட்டுரையும், அவரது மறைவின் போது நான் எழுதிய கவிதையும் உங்கள் பார்வைக்கு.

நான் கூட அமெரிக்கா வந்த பிறகு, சிவாஜி நடித்த முக்கியமான திரைப்படங்களின் சூப்பர் பிரிண்ட் வி.எச்.எஸ் தொகுப்பை அப்பாவுக்கு பிறந்த நாள் பரிசாய் அனுப்பி வைத்தேன். அதில் தில்லானா மோகனாம்பாளும் ஒன்று!

சன் டி.வியிலும் காவிய புதன் என்று சொல்லி, அவ்வப்போது காவியங்கள்
போடத்தான் செய்கிறார்கள்.

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[FireFox and my blog!]]> http://arunhere.com/pathivu/?p=11 2005-04-08T14:35:47Z 2005-04-08T14:35:47Z பொது Dear Friends,
Greetings. I know firefox users are not able to read my blog because of
font issues and I dont know why the unicode tamil fonts are not visible in
firefox. If anybody knows how to make it work, Please drop me an email
at arun@arunhere.com. Btw, please go and read the following two links
and vote for the firefox bug, If you haven’t done that already.
kasi.thamizmanam.com
Mozilla Bug

Thanks and Have a great weekend!

- Arun Vaidyanathan

]]>
Administrator <![CDATA[‘ஆறு’வது சினம்!]]> http://arunhere.com/pathivu/?p=12 2005-04-09T20:27:49Z 2005-04-09T20:27:49Z நகைச்சுவை தோற்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால், கொஞ்சம் கூட போராடாமல் தோற்பது எரிச்சல். அதுவும் அதற்கு முந்தைய பந்தயங்களில் சகட்டு மேனிக்கு அடித்து ஜெயித்தவர்கள்… ஐம்பது ரன்னுக்கு ஐந்து விக்கெட் இழப்பது அராஜகம். மூன்றாவது ஒரு தினப்போட்டியின் மூலம் அறிந்து கொண்ட பாடங்கள்:-

(1) தூக்கம் ரம்மியமானது. சேவாக்கின் சிக்ஸர்களையும், டோனியின் விளாசல்களையும் விட… நம்பத்தகுந்தது!

(2) சச்சின் இப்போதைக்கு விளையாடுவதாயில்லை.

(3) கங்குலி டாஸ் போடுவதையும், மிஸ் பீல்ட் செய்வதையும் மட்டுமே செய்வதற்காக அணியில் இருந்து வருகிறார்.

(4) யுவராஜ், கெய்ப் - ஆறு ஒரு தினப்போட்டிக்கு ஒரு முறை நன்றாக விளையாடுவார்கள். மற்றபடி அவர்கள் நல்ல பீல்டர்கள் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு பந்தயத்தைப் பார்க்க வேண்டும்.

(5) நமது வேகப் பந்து வீச்சாளர்களுக்கு, எப்போது எங்கு எதற்காக ‘உவ்வா’ ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது.

(6) இது போன்று ஆயிரம் முறை நடந்தாலும், இரண்டு வெற்றிகள் தொடர்ந்து கிடைத்தால்…இந்தப் பாழாய்ப் போன புத்திக்குத் தெரியாது!

முஷாரப் டெல்லி வரும் போது, இந்தியா 5-0 என்று முன்னணியில் இருப்பதை விட இந்தியா மூன்று-பாகிஸ்தான் இரண்டு என்று வெற்றிக் கணக்கு இருந்தால் தானே, அந்தப் போட்டிக்கும் ஒரு மரியாதை இருக்கும்! இந்தத் தொடர் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டுமென்பதற்காக, ‘பாவ்லா’ விளையாட்டு விளையாடுகிறார்களோ…என்ன கருமமோ, யார் கண்டது?

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[சச்சின் விளாசல்!]]> http://arunhere.com/pathivu/?p=13 2005-04-12T10:43:32Z 2005-04-12T10:43:32Z விளையாட்டு சச்சின் 100 அடித்து இருக்கிறார்…அதுவும் குறைவான பந்துகளில்…அதுவும் இரண்டு சிக்ஸர்களோடு! இப்போது தான் ‘சச்சின் இப்போதைக்கு விளையாடுவதில்லை’ என்று மனம் நொந்து எழுதினேன், அதற்குள் ஒரு அசத்து அசத்தியிருக்கிறார். சச்சினை மட்டம் தட்டுபவர்களைக் கண்டால், எனக்கு பரிதாபமாயிருக்கும். கடந்த பதினைந்து வருடத்தில், இந்தியக் கிரிக்கெட் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலேயே சச்சினுக்கென்று ஒரு சிம்மாசனம் இருக்கிறது. அது அவருக்கு மட்டுமே உரித்தானது! சச்சின் சில பந்தயங்களில் விளையாடாவிட்டால், ‘அட..அவரின் ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லையே’ என்று வருத்தமேற்படுமேயொழிய…மட்டம் தட்ட ஒருக்காலும் என்னால் முடியாது! சச்சினைத் தொடர்ந்து குறைந்து மதிப்பிடுபவர்களுக்கும், மட்டம் தட்டுபவர்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

- அருண் வைத்யநாதன்

]]>
Administrator <![CDATA[மும்பை எக்ஸ்பிரஸ்]]> http://arunhere.com/pathivu/?p=14 2005-04-15T04:33:21Z 2005-04-15T04:33:21Z கலை கமல்ஹாசன் நகைச்சுவையிலேயே ஒரு புதிய உயரத்தைத் தொட்டிருக்கிறார். கமல்ஹாசன் பேட்டியில் சொன்னதைப் படத்திலும் செய்திருக்கிறார்…படத்தில் எல்லோருமே சீரியஸாகத் தான் விஷயங்களை செய்கிறார்கள், நாம் தான் சிரிக்கிறோம். சின்னதாய் ஒரு கதை, அதை சுற்றி பலமான திரைக்கதை, நேர்த்தியான நகைச்சுவை வசனங்கள் என்று அத்தனை அம்சமும் அம்சமாகவே இருக்கிறது. டிஜிட்டல் ஒளிப்பதிவு தான் லாங் ஷாட்டுகளில் (மூன்று இடங்களில்) கொஞ்சம் பல்லை இளிக்கிறது…ஆனால், அவற்றையெல்லாம் மறக்கடிக்க வைக்கிறது நகைச்சுவை. படத்தில் பல விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தது…அவற்றைப் பற்றியெல்லாம் விரிவாய் அப்புறம் சொல்கிறேன் (இங்கு மணி இரவு பன்னிரண்டு முப்பது…!!!).

இன்று திண்ணைப் போட்டியில் தேர்வு பெற்றமைக்காக பரிசுத்தொகை வந்தது..நல்ல டைமிங். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (அப்பப்போ இங்கே வர முடியறதில்லை, கூடிய சீக்கிரம் பழையபடி …சரி விடுங்க, சொல்றதை விட செஞ்சுக் காட்டறேன்)

- அருண் வைத்யநாதன்

]]>