March 31st, 2005
வணக்கம்.
எனது புது வீட்டிற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்போது தான் குடியேறி உள்ளேன். இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, ஆங்காங்கே அவ்வப்போது ஏதேனும் புதிது புதிதாய் விஷயங்கள் தென்பட்டுக் கொண்டே இருக்கத் தான் செய்யும். இந்த வீட்டிற்கு நான் வருவதற்கு பெரிதும் உதவி செய்த மதி கந்தசாமிக்கு என் நன்றிகள் பல!
- அருண் வைத்யநாதன்
Posted in பொது | 13 Comments »
April 1st, 2005
Harold and Kumar go to white castle:-
ஹரால்ட் என்ற ஆசிய அமெரிக்கனும், குமார் என்ற இந்திய அமெரிக்கனும் வொயிட் காஸ்டில் என்ற அமெரிக்க உணவு விடுதியில், பர்கர் சாப்பிட ஆசைப்பட்டுப் பயணத்தைத் துவக்குகிறார்கள். இத்துணூண்டு கதையை வைத்து, திரைக்கதை மூலமாக ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்கள்.
Read the rest of this entry »
Posted in கலை | 1 Comment »
April 2nd, 2005
கமல்ஹாசன், மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் கண்டிப்பாய் சிரிக்க வைக்கிறேன் என்ற உறுதிமொழியோடு வருகிறார். நான் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்…ஏனென்றால்,
Read the rest of this entry »
Posted in கலை | 13 Comments »
April 4th, 2005
கிளியின்
துளிநிமிட விடுதலை,
அளிக்கப்படும் அரிசி
ஆகியன எண்ணி…
அடுக்கப்பட்டிருக்கும்
அட்டைகளிலொன்றில்
எனது மிச்ச வாழ்விற்கான
சூத்திரமிருப்பதாய் நம்புகிறேன்.
- அருண் வைத்யநாதன்
Posted in கவிதை | 5 Comments »
April 6th, 2005
கடந்த மார்ச் 8ஆம் தேதி, சென்னையில் நடந்த குறும்படங்கள் திரையிடல் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு. பத்திரிக்கைகளில் வந்த பேட்டிகளையும் காலரியில் இணைத்துள்ளேன். நான் 1996-97 ஆம் வருடம் தினபூமி டிவிபூமியில் கொடுத்த பேட்டி சமீபத்தில் கைக்குக் கிடைத்தது. இன்னும் நிறைய புகைப்படங்களும், இன்ன பிற விஷயங்களும் இந்த கேலரியில் இணைக்க வேண்டும்….செய்தவுடன் சொல்கிறேன்.
- அருண் வைத்யநாதன்
Posted in கலை | 13 Comments »
April 7th, 2005
தில்லானா மோகனாம்பாள் நாவலாய் வந்த போதே, நிறைய வாசகர்கள் விகடனை மொய்த்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். இந்தப் படத்தின் கதை வசன ஒலிநாடா,எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டரில் ஓடி ஓடித் தேய்ந்திருக்கும். Read the rest of this entry »
Posted in கட்டுரை | 7 Comments »
April 8th, 2005
Dear Friends,
Greetings. I know firefox users are not able to read my blog because of
font issues and I dont know why the unicode tamil fonts are not visible in
firefox. If anybody knows how to make it work, Please drop me an email
at arun@arunhere.com. Btw, please go and read the following two links
and vote for the firefox bug, If you haven’t done that already.
kasi.thamizmanam.com
Mozilla Bug
Thanks and Have a great weekend!
- Arun Vaidyanathan
Posted in பொது | 6 Comments »
April 9th, 2005
தோற்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால், கொஞ்சம் கூட போராடாமல் தோற்பது எரிச்சல். அதுவும் அதற்கு முந்தைய பந்தயங்களில் சகட்டு மேனிக்கு அடித்து ஜெயித்தவர்கள்… ஐம்பது ரன்னுக்கு ஐந்து விக்கெட் இழப்பது அராஜகம். மூன்றாவது ஒரு தினப்போட்டியின் மூலம் அறிந்து கொண்ட பாடங்கள்:-
(1) தூக்கம் ரம்மியமானது. சேவாக்கின் சிக்ஸர்களையும், டோனியின் விளாசல்களையும் விட… நம்பத்தகுந்தது!
(2) சச்சின் இப்போதைக்கு விளையாடுவதாயில்லை.
(3) கங்குலி டாஸ் போடுவதையும், மிஸ் பீல்ட் செய்வதையும் மட்டுமே செய்வதற்காக அணியில் இருந்து வருகிறார்.
(4) யுவராஜ், கெய்ப் - ஆறு ஒரு தினப்போட்டிக்கு ஒரு முறை நன்றாக விளையாடுவார்கள். மற்றபடி அவர்கள் நல்ல பீல்டர்கள் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு பந்தயத்தைப் பார்க்க வேண்டும்.
(5) நமது வேகப் பந்து வீச்சாளர்களுக்கு, எப்போது எங்கு எதற்காக ‘உவ்வா’ ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது.
(6) இது போன்று ஆயிரம் முறை நடந்தாலும், இரண்டு வெற்றிகள் தொடர்ந்து கிடைத்தால்…இந்தப் பாழாய்ப் போன புத்திக்குத் தெரியாது!
முஷாரப் டெல்லி வரும் போது, இந்தியா 5-0 என்று முன்னணியில் இருப்பதை விட இந்தியா மூன்று-பாகிஸ்தான் இரண்டு என்று வெற்றிக் கணக்கு இருந்தால் தானே, அந்தப் போட்டிக்கும் ஒரு மரியாதை இருக்கும்! இந்தத் தொடர் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டுமென்பதற்காக, ‘பாவ்லா’ விளையாட்டு விளையாடுகிறார்களோ…என்ன கருமமோ, யார் கண்டது?
- அருண் வைத்யநாதன்
Posted in நகைச்சுவை | 9 Comments »
April 12th, 2005
சச்சின் 100 அடித்து இருக்கிறார்…அதுவும் குறைவான பந்துகளில்…அதுவும் இரண்டு சிக்ஸர்களோடு! Read the rest of this entry »
Posted in விளையாட்டு | 7 Comments »
April 14th, 2005
கமல்ஹாசன் நகைச்சுவையிலேயே ஒரு புதிய உயரத்தைத் தொட்டிருக்கிறார். கமல்ஹாசன் பேட்டியில் சொன்னதைப் படத்திலும் செய்திருக்கிறார்…படத்தில் எல்லோருமே சீரியஸாகத் தான் விஷயங்களை செய்கிறார்கள், நாம் தான் சிரிக்கிறோம். Read the rest of this entry »
Posted in கலை | 3 Comments »